Connect with us
 

News

வாரிசு மற்றும் துணிவு ரசிகர் ஷோ கிடையாதா?

Published

on

வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

தமிழகம் முழுவதும் சரி பாதி திரையரங்குகளில் இரு திரைப்படங்களும் வெளியாகவுள்ளது. மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் அஜித், விஜய் படங்கள் வெளியாகவுள்ளது. பொதுவாக இவர்களின் படங்கள் வெளியானால் அதிகாலை 4 மணி காட்சி ரசிகர்கள் காட்சிகளாக திரையிடப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை இருவரின் படமும் ஒரே நாளில் வருவதால் அஜித் – விஜய் ரசிகர்களிடையே மோதல் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் அதனால் வீண் சண்டை, மோதல்களை தடுக்கும் விதமாக இரு படங்களுக்கும் ரசிகர் ஷோ திரையிடப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு பதிலாக அதிகாலை 8 மணிக்குத்தான் முதல் ஷோ திரையிடப்படும் என கூறப்படுகிறது. அதே போல வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகும் மல்டிப்பெளக்ஸ் திரையரங்குகள் சில காவல்துறை பாதுகாப்பை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.