மரகதநாணயம் என்ற மிகப்பெரிய வெற்றி படத்துக்கு பின்னர் இயக்குநர் ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக இன்று வெளியாகியுள்ள திரைப்படம் வீரன்.
படத்தின் கதை 2007-ம் ஆண்டு வீரனூர் என்ற கிராமத்தில் ஆரம்பமாகிறது 15 வயது சிறுவனாக இருக்கும் ஹிப்ஹாப் தன் நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள அனைவருமே அந்த கிராமத்து சாமியான வீரன் சாமியை வழிபட்டும் மிகுந்த நம்பிக்கையுடனும் வாழ்கின்றனர். ஆனால் ஆதியோ சாமியை நம்புவதில்லை. ஒரு நாள் பள்ளி முடிந்து தன் நண்பர்களுடன் வீட்டுக்கு போகும் போது சாமியை பற்றி தவறாக பேசி விட்டு செல்கிறார். அடுத்த நிமிடமே ஆதியை மின்னல் தாக்கிவிடுகிறது சுய நினைவை இழந்து மயங்கி கீழே விழுகிறார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். குணமசையாமல் இருப்பதால் ஆதியின் அக்கா அவரை தான் வசிக்கும் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறார். காலங்கள் ஓடி பெரியவனாகிறார்.
ஒரு நாள் ஆதியின் கனவில் தனது கிராமத்தில் உள்ள ஒரு குழாய் வெடித்து சிதறி அந்த கிராமமே அழிவது போன்ற கனவு வருகிறது. இதனால் சிங்கப்பூரிலிருந்து தன் கிராமத்திற்கு வருகிறார். சிறு வயதில் மின்னல் தாக்கியதால் இவருக்கு ஒரு மிகப்பெரிய சக்தி கிடைக்கிறது. இவருக்கு இப்படி ஒரு சக்தி இருப்பது இவரின் குடும்மத்திற்கு மட்டுமே தெரியும்.
கிராமத்திற்கு வரும் ஆதி அங்குள்ள தன் கிராம குல தெய்வமான வீரன் கோவிலை அழிக்க சிலர் திட்டம் போடுவது தெரிய வருகிறது. இதனால் கிராமத்து மக்களை திரட்டியும் ஒரு கட்டுக்கதையை கிளப்பி விட்டும் தன் சக்தியை பயன்படுத்தி அதை தடுக்க முயற்றி செய்கிறார். இந்த முயற்றி ஆதிக்கு வெற்றி கொடுத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
முதல் முறையாக தமிழ் சினிமாவில் வெளியாகிருக்கும் சூப்பர் ஹீரொ திரைப்படம் இதில் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் ஆதி நடிப்பில் நன்றாக முன்னேறி உள்ளார். குறிப்பாக கத்தி பேசும் வசனம் ஓவர் பில்டப் என்று எதுவும் இல்லாமல் சாந்தமான நடிப்பால் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார். அதே போலா சூப்பர் ஹீரோவாக வரும் போது அந்த கதாப்பாத்திரத்துக்கு என்ன வேண்டுமே அதை சிறப்பாக தனது நடிப்பால் வெளிக்காட்டியுள்ளார்.
ஆதிக்கு ஜோடியாக வரும் அதிதி ராஜ் பொள்ளாச்சி பெண்ணாக ரசிக்க வைக்கிறார். சிறு வயதிலிருந்தே தோழியாகவும் பின்னர் காதலியாகவும் கிராமத்து காதலை அழகாக வெளிக்காட்டி நடித்துள்ளார்.
வில்லன் கதாப்பாத்திரத்தில் வரும் வினய் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு டாக்கர் வில்லனாக நம்மை மிரட்டி எடுக்கிறார். இப்படத்தில் இவருக்கு சிறப்பு தோற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர்களை தவிர படத்தில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், காளி வெங்கட், முனிஸ்காந்த், என அனைவருமே தங்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் ஒரு சூப்பர் ஹீரோ படத்தி அனைவருமே ரசிக்கும் வகையில் கிராமத்து வாசத்துடன் அதே சமயம் சமூக பிரச்சனையுடனும் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாகவும் திரைக்கதை அமைத்து எடுத்துள்ளார். அதற்காக இவர் தேர்வு செய்த கதாப்பாத்திர தேர்வுகள் கூடுதல் பலம். குறிப்பாக ஆதிக்கு பில்டப் காட்சிகள் இல்லாமல் ஆதி சூப்பர் ஹீரோ ஆனதும் அந்த கதாப்பாத்திரத்துக்கு பில்டப் கொடுத்தது பாராட்டியே ஆகவேண்டும்.
படத்தின் முதல் பாதியும் சரி இரண்டாம் பாதியும் சரி சில பல இடங்களில் தொய்வு இருந்தாலும் அது திரைக்கதையை எந்த விதத்திலும் பாதிக்காமல் சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்லி அதை எல்லாம் நம்மை மறக்க செய்கிறார்.
தீபக் டி மேனனின் ஒளிப்பதிவு பொள்ளாச்சி அழகை மேலும் அழகாக காட்டியுள்ளார் ஹிப்ஹாப் ஆதியின் இசை மற்றும் பின்னணி இசை இரண்டிலும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக இவர் வீரன் வேடத்தில் வரும் போது பின்னணி இசை நம்மை மேல் சிலிர்க்க வைக்கிறது.
கதையை படமாக்கிய விதம் நன்றாக இருக்கிறது. தன் சக்தியால் பிறரின் மூளையை குமரான் கட்டுப்படுத்துவது போன்று காட்டியிருப்பது நம்பும்படி இருக்கிறது.
Veeran Review By CineTime
[wp-review id=”46137″]