Connect with us
 

News

இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் விடுதலை !

Published

on

RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், Vetrimaaran directorial விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் Viduthalai படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் Viduthalai படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து Viduthalai படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தற்போது அடுத்த அதிரடியாக இப்படத்தின் இரண்டு பாகங்களையும் Red Giant Movies சார்பில் உதயநிதி வழங்குகிறார் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. தொடர் வெற்றிப்படங்களின் பிராண்டாக மாறியிருக்கும் Red Giant Movies நிறுவனம் “விடுதலை” படத்தினை வெளியிடுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

விடுதலை- பாகம் 1 இன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் ‌ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை 2 ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவேண்டியுள்ளது. தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விடுதலை- பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.