Connect with us
 

News

தி பேமிலி மேன் தொடரில் நடிக்கிறேனா விஜய்சேதுபதி விளக்கம் !

Published

on

இந்தியில் மனேஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி ஆகியயோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான தி பேமிலிமேன் 2 தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்பு கிளம்பின. தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

அடுத்து இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராகவுள்ளது. இதில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய்சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார். நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வமாகவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய்சேதுபதி விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்திலும் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்.