Connect with us
 

News

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த விக்ராந்த் !

Published

on

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். வில்லனாக துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வல் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ராந்தும் இணைந்துள்ளார்.கடந்த சில வருடங்களாக விக்ராந்த் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் கவனம் பெற்று வரும் நிலையில் இப்படத்திலும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.