News
மார்க் ஆண்டனி படத்துக்கு விஷாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை உயர்நீதிமன்றம் உத்தரவு !
விஷால் மீது பிரபல தயாரிப்பு நிறுவனம் லைக்கா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராஜி விளக்கம் அளித்தார். இதனையடுத்து விஷாலின் 4 வங்கி கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களையும் ஆவணங்களுடன் செப்டம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் விஷால் நடிப்பில் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.