Connect with us
 

News

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா என பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப் பட்டுள்ளனர். இந்தப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி நடித்துள்ளார்.

தயாரிப்பு சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.