Connect with us
 

News

வாரிசு நடிகை என்றால் மட்டும் சினிமாவில் வெற்றி பெற முடியாது – அதிதி ஷங்கர் !

Published

on

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் ‘விருமன்’ இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் Aditi Shankar. ரசிகர்கள் மத்தியில் Aditi Shankar-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விருமன் திரைப்படம் வெளியாக முன்னரே சிவகார்த்திகேயனின் ‘மாவிரன்’ படத்திலும் ஒப்பந்தம் செய்து விட்டனர். இவை அனைத்தும் ஷங்கரின் மகள் என்பதால்தான் கிடைத்தது என்று பலர் மனதுக்குள் புழுங்கி வருகிறார்கள் சில நடிகைகள் கூட.

இந்த நிலையில் Aditi Shankar அளித்த ஒரு பேட்டியில் இதற்கு பதில் கொடுத்து இருக்கிறார். ‘முத்தையா இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘விருமன்’ பட வாய்ப்பு எனது அப்பாவினால்தான் கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் விருமன் படத்தில் எனது நடிப்பு குறித்து சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியான பிறகுதான் மாவீரன் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தனர்.

முக்கியமாக எனக்கான சினிமா கதவுகள் எனது தந்தையால் திறந்திருக்கலாம். ஆனால் என்னிடம் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நீண்ட நாள் இருந்து ஜெயிக்க முடியும். வாரிசு நடிகை என்ற ஒன்றை மட்டுமே வைத்து சினிமாவில் யாரும் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார் Aditi Shankar.