Connect with us
 

Reviews

யூகி – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, நட்டி, நரேன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் யூகி.

படத்தின் ஆரம்பத்திலேயே ஆனந்தி அழுதுகொண்டே ஒரு காரில் ஏறி செல்கிறார் காட்சி அங்கே முடிகிறது. அதன் பின்னர் போலீஸ் அதிகாரியான பிரதாப் போத்தன் டிடெக்டிவ் அதிகாரியான நரேனிடம் ஒரு உதவி கேட்கிறார். ஆனந்தியை யாரோ கடத்தி விட்டதாகவும் கடத்தை சென்ற ஆனந்தியை மீட்டு கொடுக்குமாறு கேட்கிறார். அதே சமயம் அரசியல் கட்சியில் இருக்கும் ஒருவரின் கட்டளைக்கு கீழ் ஆனந்தியை நட்டியும் தேடுகிறார்.

ஆனந்தியை பற்றிய முழு விபரத்தையும் போலீஸ் அதிகாரியான கதிரிடம் கொடுத்து விடுகிறேன் என்று நரேனிடம் கூறுகிறார் பிரதாப் போத்தன். இப்படி இரு தரப்பும் ஆனந்தியை தேடி அலைய யார் முதலில் கண்டு பிடித்தார்கள் ? ஆனந்தியை கடத்தியது யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் மொத்தமாக 3 நடிகர்கள் கதிர், நரேன், நட்டி இதில் நரேனை சுற்றித்தான் ஒட்டு மொத்த கதையும் செல்கிறது. படத்தின் ஆரம்பத்தில் நல்லவர் போல வரும் நரேன் போக போக இவர்தான் வில்லனோ என்ற நினைப்பு நமக்குள் வந்து விடுகிறது தனது மாறுபட்ட நடிப்பால் அசத்தியுள்ளார்.

இடைவேளைக்கு பின்னர் கதிர் யார் என்ற உண்மையை நமக்கு சொல்லும் இடத்திலிருந்து கதிருக்கு உள்ள முக்கியத்துவத்தை கொடுத்துள்ளனர்.

நட்டி படத்தின் ஆரம்பத்திலுந்தே இவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்ற குழப்பத்துடன் அறிமுகம் கொடுக்கிறார். இறுதியில் அவரை பற்றிய உண்மையை நமக்கு தெரிந்ததும் எந்த வித ஆச்சர்யமும் வரவில்லை நமக்கு.

நாயகியாக வரும் ஆனந்தி சில நிமிடங்கள் வந்தாலும் கணவனை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வேன் என்று போகும் பாசமுள்ள மனைவியாகவும் கணவனுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் எரியும் எரிமலை மனைவியாகவும் கணவனை காப்பாற்ற முடியவில்லை என்று கதறி அழும் காட்சிகளிலும் நம்மை நெகிழ வைக்கிறார்.

வில்லனாக வரும் ஜான் விஜய் தனக்கே உரிய அந்த பாணியில் அருமையான நடிப்பு இவர்களை தவிர படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ஆத்மியா கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.
வித்தியாசமான ஒரு கதாப்பாத்திரத்தில் வரும் பவித்ரா லட்சுமியின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை.

வாடகைத்தாய் விவகாரத்தை மையப்படுத்தி ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதன் கதையை சில ஆண்டுகளுக்கு முன்பே எழுது விட்டேன் என்று கூறினார் படத்தின் இயக்குநர் ஸாக் ஹாரிஸ். ரஞ்சின் ராஜ் இசையும் பின்னணி இசையும் ரசிக்கலாம். படத்தின் ஒளிப்பதிவு பெரிதாக கவரவில்லை.

படத்தின் தலைப்புக்கு ஏற்ற போல ஒரு ஒரு காட்சியையும் நம்மை யூகிக்க வைக்கிறார் இயக்குநர் சிறப்பு. அதே போல படத்தில் இடைவேளைக்கு பின்னர் வரும் திரைக்கதை துண்டு துண்டாக வருவதால் புரிந்து கொள்வதிலும் விறுவிறுப்பையும் குறைக்கிறது.
Yugi Review By CineTime

[wp-review id=”44637″]