Connect with us
 

News

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் வெளியீட்டு தேதி !

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ஆக்‌ஷன் கிராமத்து கதையில் உருவாகிவரும் இப்படம் இவர்களின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம். இதற்கு முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் வெளிவந்துள்ளன.

இப்படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜசரி கணேஷ் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார். தற்போது இருக்கும் உடல் இடையை விட இன்னும் உடல் எடையை குறைத்து இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் ஆரம்பித்து மும்பையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இந்த படத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.