Connect with us
 

Teaser

பத்து தல – டீஸர் !

Published

on

கன்னடத்தில் வெளியான முப்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்ற வருகிறது. மார்ச் 30-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி பின்னணியில் மணல் கடத்தல் தாதாவாக ஏஜிஆர் என்ற ராவணாக அதிரடி காட்டி நடித்துள்ளார் சிம்பு. கவுதம் மேனன் அரசியல்வாதியாகவும், கவுதம் கார்த்திக் அடியாள் போல வேடத்திலும் நடிகை ப்ரியா பவானி சங்கர் அரசு அதிகாரியாகவும் நடித்துள்ளார்.

1.37 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய டீஸரில் பல அதிரடியான மாஸ் வசனங்கள் உள்ளன குறிப்பாக ‘மண்ண ஆள்றவனுக்குதான் எல்ல மண்ண அள்ற எனக்கு அது இல்ல, நான் படியேறி மேல வந்தவன் இல்ல எதிரிகள மிதிச்சி ஏறி மேல வந்தவன், என்னால எத்தன பேரு செத்தானும் தெரியாது எத்தன பேரு வாழ்ந்தானும் தெரியாது.