Connect with us
 

Trailer

Agilan – Trailer !

Published

on

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் அகிலன். இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடியான சண்டைகைக்காட்சிகளுடன் மாஸ் வசனத்துடன் வெளியாகியுள்ள இந்த டிரைலரும் இப்படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.