Connect with us
 

Reviews

ஹாஸ்டல் – திரைவிமர்சனம் !

Published

on

டந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அடி காப்பியரே கூட்டாமணி’ என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த ‘ஹாஸ்டல்’ திரைப்படம் வேறு மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை ரீமேக் என்ற பெயரில் படு மொக்கையாக எடுப்பதன் மூலமே ரீமேக் படங்கள் மேல் தமிழ் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து கொண்டே போகிறது.

Movie Details

ஆண்களின் ஹாஸ்டலுக்குள் வேண்டுமென்றே சென்று சூழ் நிலை காரணமாக வெளியில் வரமுடியாமல் அங்கேயே மாட்டிக்கொள்கிறார் ப்ரியா பவானி சங்கர் பின்னர் அங்கிருந்து எப்படி வெளியில் வருகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தெகிடி, ஓ மை கடவுளே, என தொடர்ந்து நல்ல வெற்றி படங்களை மட்டுமே அழகாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகரான அஷோக் செல்வன் எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை.

நடிகையாக வரும் ப்ரியா பவானி சங்கர் ஹாஸ்டலுக்குள் மாட்டிக்கொள்ளும் இவர் நடிப்பு என்பதை கொடுக்க முடியாமல் திக்கி தவிக்கிறா. அதாவர் யார் கண்ணிலும் பட்டுவிடாமல் ஓடி இளிவரை தவிர இவருக்கு நடிப்பு என்பது எதுவுமே இல்லை என்பது சோகங்கள்.

ஆண்களின் ஹாஸ்டல் ஸ்டிக்டான வார்டனாக வரும் நாசர். அவர் கண்ணில் படாமல் ப்ரியா பவானி சங்கரை அஷோக் செல்வன் தப்பிக்க வைக்க இவர் செய்யும் வேலைகள் நம் பொறுமையை சோதித்து விடுகிறது.

கல்லூரி மாணவர்களாக வரும் அஷோக் செல்வன், சதீஷ் இவர்களை பார்க்கும் போது எந்த இடத்திலும் கல்லூரி மாணவர்கள் போல இல்லை அதிலும் குறிப்பாக சதீஷ் சுத்தமாக இந்த கதாப்பாத்திரதுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு தேர்வு.

காமெடிக்கு முனிஷ்காந்த் காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் எதையும் பொறுத்துக்கொண்டு இருக்கவில்லை வெளியில் போய்விடலாம் என்று தோணுகிறது கொடுத்த காசுக்கு திரையரங்கில் ஏ.சி காற்று கிடைக்கும் என்றுதான் பலர் இருந்து படம் பார்த்தார்கள்.
Cinetimee

படத்தில் வரும் ஹாஸ்டலை செட் போட்டிருக்கிறார்கள் அதை கூட கொஞ்சம் பெரிதாக போட்டு இருக்க கூடாதா எந்த பக்கம் எப்படி காட்டினாலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. இந்த உலகத்தில் இப்படி ஒரு குட்டியான ஹாஸ்டலை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே பிறந்த குழந்தை போல நிற்க முடியாமல் தள்ளாடும் திரைப்படம் முடியும் வரை அந்த தள்ளாட்டம் தொடர்கிறது. படத்தில் திரைக்கதை என்ற ஒன்று அழுத்தமாக இல்லை என்றால் யாராலும் காப்பாற்ற முடியாது.


மொத்தத்தில் ஹாஸ்டல் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கஷ்டம்.