Connect with us
 

Reviews

சொப்பன சுந்தரி – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. மேலும் இப்படத்தில் லட்சுமி பிரியா, தீபா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

உடன் பிறந்த அண்ணன் கைவிட்டு சென்ற பின்னர் தாய், மாற்றுத் திறனாளியான அக்கா, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பா என அனைவரையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஜஸ்வர்யா ராஜேஷ். அங்குள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

அந்த நகைக்கைடை அதிக அளவில் நகை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கொடுக்க அந்த நகைக்கடை முதலாளி முடிவு செய்கிறார்.

அப்படி முதல் பரிசாக ஜஸ்வர்யா ராஜேஷுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது. வறுமையின் எல்லைக்கோட்டில் இருக்கும் ஜஸ்வர்யா ராஜேஷுக்கும் அவரின் குடும்பத்துக்கும் இந்த கார் பரிசாக கிடைத்ததை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கொண்டிருப்பார்கள். வாய் பேச முடியாமல் இருக்கும் தன் அக்காவுக்கு அந்த காரை சீதனமாக கொடுத்து திருமணத்தை நடத்தி விடலாம் என முடிவு செய்கிறார் ஜஸ்வர்யா ராஜேஷ்.

இந்த நிலையில் அந்த கார் எனக்குதான் சொந்தம் என ஜஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் கருணாகரன் வருகிறார். இதனால் போலீஸ் நிலையம் வரைக்கும் இந்த பிரச்சனை செல்கிறது. இறுதியில் அந்த கார் ஜஸ்வர்யா ராஜேஷுக்கி கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி அண்ணே சொல்லும் ஒரு வார்த்தை இந்த சொப்பன சுந்தரி அந்த காமெடியை நாம் மறக்கவே முடியாது. அதே போல அந்த பெயரில் ஒரு காரை வைத்து படம் முழுவதையும் விறுவிறுப்பாக கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குநர் சார்லஸ் முயற்சி செய்துள்ளார்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் என்றாலே ஜஸ்வர்யா ராஜேஷ் மட்டும்தான். மிக மிக சாதரணமான கதை என்றாலும் கதைக்கு ஏற்ற போல மிக சாதரணமாக பெண்ணாக இந்த கதைக்கு ஏற்ற போலவே நடித்து அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ். ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள், எமோஷன் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ்.

நடிகை லட்சுமி பிரியா மற்றும் தீபா தங்களின் கதாப்பாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்து படத்தின் வெற்றிக்கு பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக இவர்கள் இருவரும் சேர்ந்து ஜஸ்வர்யா ராஜேஷ்யுடன் இணைந்து செய்யும் அனைத்து காட்சிகளும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.

மைம் கோபி, கருணாகரன், போலீஸ் அதிகாரியாக வரும் சுனில் குமார் என அனைவருமே சிறப்பாக நடைத்துள்ளனர். படத்தில் வரும் பாடல்கள் அனைதுமே எந்த விதத்திலும் ரசிக்க வைக்கவில்லை பின்னணி இசையும் அதே ரகம்தான்.

ஒரு சாதாரண கதை என்றாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்று படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். இவரின் இயக்கத்தில் முன்னதாக வெளியாக படமான லாக்கப் படத்தில் படத்தின் இறுதியில் சில டுவிஸ்ட் மற்றும் நாம் எதிர்பார்க்காத இப்படத்தை மேலும் ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் நன்றாக ரசித்து பார்க்க கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.
Soppana Sundari Review By CineTime