Connect with us
 

Reviews

தி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம் !

Published

on

Movie Details

மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை அப்படியே தமிழ் மொழியில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன். நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆசிரியராக இருக்கும் ராகுல் ரவீந்திரன், ஜஸ்வர்யா இருவருக்கும் திருமணம் நடக்கிறது. கணவன் வீட்டிற்கு ஜஸ்வர்யா ராஜேஷ் வந்ததும் மகளுக்கு குழந்தை பிறக்கபோடுகிறது என்பதற்காக ஊருக்கு சென்று விடுகிறார் மாமியார். வேறு வழியில்லாமல் வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜஸ்வர்யா ராஜேஷ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கணவருக்கு ஒரு விதமான சமையல், மாமனாருக்கு ஒரு விதமான சமையல் என ஜஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கை அந்த சமயல் அறைக்குள்ளேயெ போகிறது. பெண் பவள் வீட்டை மட்டுமே நிர்வகிக்க வேண்டும் அதுதான் பெண்ணின் வேலை என கூறுகிறார்கள் மாமனாரும் கணவனும். இதை வேறு வழியில்லாமல் ஏற்க்கும் ஜஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பை கொடுக்கிறது. அதன் பின்னர் இவர் எடுக்கும் முடிவுதான் படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் கதாநாயகியின் குடும்பம் ஒரு நடுத்தர வசதி கொண்ட குடும்பமாக காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் அப்படிக்காட்டவில்லை என்பதே வருத்தம். அதே போலா ஜஸ்வர்யா ராஜேஷ் கதாப்பாத்திரத்தை தவிர வேறு எந்த கதாப்பாத்திரமும் சரியான தேர்வு இல்லை என்பது படத்தின் பலவீனமாக உள்ளது.

மலையாளத்தில் இப்படத்திற்கு இருந்த அந்த ஒரு உணர்வு தமிழ் மொழியில் ரீமேக் செய்யும் போது காணாமல் போனது ஏனோ? அதாவது மலையாளத்தில் கதா நாயகனாக நடித்திருந்தவர் நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு அவரை அப்படத்தில் பார்க்கும் போது பெண்களுக்கு கொலை செய்து விடலாமா அவரை என்ற ஒரு நினைப்பும் நாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் மீது ஒரு இனம் புரியாத பரிதாபமும் வரும் இவை எல்லாம் தமிழில் மிஸ் ஆகிறது.

மொத்தத்தில் மலையாளத்தில் வந்திருந்த இப்படம் தமிழில் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அனைவரும் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
The Great Indian Kitchen Review By CineTime

[wp-review id=”45394″]