Connect with us
 

News

ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் பல முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது.

மலையாளத்தில் இதே பெயரில் வெளியான இப்படம் அங்கு மாபெரும் வெற்றியும் நல்ல வசூலையும் குவித்தது. அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

இப்படம் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் அதே நாளில் பல தமிழ் திரைப்படங்கள் வெளியானதால் இப்படம் மீண்டும் தள்ளிப்போனது. தற்போது இப்படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கதையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜஸ்வர்யா ராஜேஷ் இப்படத்திலும் கதையின் நாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் இவரின் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டை பெற்று என்பது குறிப்பிடத்தக்கது.