News
ரஜினியை கேலி செய்த அடங்காதே படக்குழுவை அலற விட்ட தணிக்கை குழுவினர் !
ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் சுரபி ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் அடங்காதே படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததாக கூறப்பட்ட கட்சி பெயரையும் படத்தில் குறிப்பிட்டு இருந்ததாக அதிருப்தி அடைந்தனர். படத்துக்கு சான்றிதல் தர மறுத்தனர்.
பின்னர் அடங்காதே படக்குழுவினர் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கும் ரஜினிகாந்த் அரசியலை கேலி செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் வற்புறித்தியதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் பதிவு செய்ததாக சொல்லப்படுவதற்கு முன்பே அகில இந்திய பாரத் பீப்பிள் சேவா பார்ட்டி பெயரை பயன்படுத்தி படம் எடுத்து விட்டோம் குறிப்பிட்ட யாரையும் படத்தில் விமர்சிக்கவில்லை என்று படக்குழு தெரிவித்தனர்.
தணிக்கை குழுவினர் அதை ஏற்காமல் கட்சி பெயரை படத்தில் இருந்து நீக்கினர். இது போல 10 நிமிடங்கள் மேல் ஓடும் 100-க்கும் மேற்பட்ட சர்ச்சை காட்சிகளை வெட்டி நீக்கிவிட்டு யூ-ஏ சான்றிதல் அளித்துள்ளனர்.
இது பற்றி இயக்குனர் ஷண்முகம் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கணக்கிலடங்கா வெட்டுகளிடன் அடங்காதே திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.