Connect with us
 

News

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் பட டீஸர் வெளியானது !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

ரஜினியுடன் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ஜெயிலர் படத்தின் டீசரை நேற்றி வெளியிட்டது படக்குழு. முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் மிடுக்காக நடப்பது, ஸ்டைலாக கண்ணாடி அணிவது இறுதியாக வீச்சரிவாளை எடுப்பது போன்ற காட்சிகள் டீஸரில் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறப்பு டீஸர் வெளியாகி 1 மணி நேரத்திலேயெ அதனை 10 லட்சம் ரசிகர்கள் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.