Connect with us
 

News

லால் சலாம் 2 நிமிட காட்சிகளை நீக்கிய தணிக்கை குழு !

Published

on

ரஜினிகாந்த் அவர்களின் முத்த மகள் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை தமிழகம் முழுவதும் வருகிறது 9-ம் தேதி ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் லால் சலாம் படத்தை தணிக்கை குழு பார்வையிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதோடு இப்படத்தில் இடம்பெற்றுள்ள 2 நிமிடம் 6 நொடி காட்சிகளையும் நீக்கும் படி கூறியதாம். அது மட்டுமில்லாமல் 49 வினாடி காட்சிகளை மாற்றம் செய்ய கூறியுள்ளார்களாம். இது தவிர படத்தில் சில கெட்ட வார்த்தைகள் பல இடங்களில் உள்ளதாம். அதையும் நீக்கி மத ரீதியான வசனங்களையும் நீக்கி உள்ளதாம் தணிக்கை குழு.

லால் சலாம் படம் மொத்தமாக 152 நிமிடம் 38 வினாடிகள் ஓடும் படமாக உருவாகி உள்ளது.