Connect with us
 

News

ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட வில்லன் !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் தமன்னா நாயகியாகவும் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாதும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரஜினிக்கு வில்லனாக சிவராஜ் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை தவிர மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் சுனில் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த வருடம் வெளியான புஷ்பா படத்தில் இவரின் வில்லத்தனம் பெரிதாக பேசப்பட்டது.

தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகைளுடன் பான் இந்தியா படமாக ஜெயிலர் உருவாகி வருகிறது.