Connect with us
 

News

கங்கனா பிறந்த நாளில் வெளியாகும் தலைவி திரைப்படத்தின் டிரைலர் !

Published

on

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் தலைவி. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா நடிக்கிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை என்பதால் வழக்கத்தை விட இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவின் இதுவரை வெளியாகாத பல விஷயங்களையும் இப்படத்தில் கொண்டுவந்துள்ளாராம் இயக்குனர் விஜய்.

இப்படத்திற்காக கங்கனா பரதநாட்டியம், தமிழ் மொழியை கற்றுக்கொள்வதிலிருந்து ஜெயலலிதாவின் பழக்கம் வழக்கங்களை சரியாகப் பெற்றுவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை கடுமையாக உழைத்துள்ளாராம். இப்படம் வரும் எப்ப்ரல் 23-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை கங்கனாவின் பிறந்த நாளான மார்ச் 23-ஆம் தேதி வெளியிடயுள்ளனர் படக்குழு.