News
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய திகில் படத்தின் நாயகியாக பார்வதி நாயர் !

தமிழ் சினிமா திரையுலகில் இப்போது அதிக படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் முதல் இடம் கண்டிப்பாக கே.ஆர்.நிறுவனமும் ஒன்று.
தற்போது இந்த நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், டாக்டர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா உள்ளிட்ட 5 மேற்பட்ட படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இப்போது பார்வதி நாயர் படத்தின் நாயகியாக நடிக்கும் ‘ரூபம்’ என்ற புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் தாமரை செல்வன் இயக்குகிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஶ்ரீனிவாசன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.
பேய் த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளனர் படக்குழு.