News
மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணம் ரொமான்ஸ்
நடிகர் விஷ்ணு விஷால் 2011-ஆம் ஆண்டு நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 2017 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது அந்த குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் வைத்தனர்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்தும் ஆனது அதற்கு காரணம் கூறாமல் இருந்து வந்த நடிகர் விஷ்ணு விஷால் தற்போது அதற்கான காரணத்தை கூறி உள்ளார். எனக்கும் – ரஜினிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என் வாழ்க்கையில் சரியான நிகழ்வு என்றால் எனது திருமணம் என்றுதான் நினைத்து வாழ்ந்து வந்தேன் ஆனால் அது எனக்கு நிலையில்லாமல் போய் விட்டது.
நான் யாரிடமும் அதிகமாக பேசவே மாட்டேன் ஆனால் நான் இருப்பது சினிமா துறை அதில் இருந்து கொண்டு யாரிடம் பேசாமல் இருந்து வந்தால் சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் போய் விடும் என்று நினைத்து என்னை நான் மாற்றிக் கொண்டேன்.
திரையில் காதல் – ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்ற என்னத்தில் நடிகைகளுடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன் அப்போது ஆரம்பித்தது எனக்கும் – ரஜினிக்கும் பிரச்சனை இறுதியில் அதன் முடிவு இருவருக்கும் விவாகரத்து என்று கூறினார்.