News
நாய் சேகர் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைபுயல் வடிவேலு !

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நகைச்சுவை மன்னன் வைகைபுயல் வடிவேலு இவரின் நகச்சுவையை பார்த்து சிரிக்காதவர் இந்த உலகில் யாரும் இல்லை.நன்றாக போன இவரின் சினிமா வாழ்க்கையை அரசியல் எனும் புயல் புரட்டி போட்டு இவரை அழித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து முன் பணத்தையும் வாங்கி விட்டு பின்னர் நடிக்க முடியாது என்று மறுத்தார். இதன் காரணமாக அவரை புதிய படங்களில் நடிக்க யாரும் ஒப்பந்தம் செய்ய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் ரீ-என்ரிக்கு தயாராகி விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன்,மருதமலை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெயரில் வந்த இவரின் காமெடியை நம்மால் மறக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.