Connect with us
 

Trailer

வெளியானது மாமன்னன் படத்தின் டிரைலர் !

Published

on

இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள திப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிக நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இப்படம் அண்மையில் நிறைவடைந்தது. இப்படத்தின் முதல் பாடல் வடிவேலு குரலில் ராசாக்கண்ணு பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் வடிவேலு கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு இப்படத்தின் மூலம் முதன்முறையாக சீரியஸான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது நன்றாக தெரிகிறது.