News
நடிகர் அஷோக் செல்வனை மணக்கிறார் நடிகை கீர்த்தி பாண்டியன் !

அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்திருந்தாத். இவரும் நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து பல மாறுபட்ட திரைப்படங்களில் நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான போர்தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டி விட்டனர். இருவருக்கு திருமணம் செப்டம்பர் 13-ம் தேதி திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார்பட்டியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியை அனைவரும் சொல்லி மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.