Connect with us
 

Trailer

கவனம் ஈர்க்கும் கண்ணகி பட ட்ரைலர் !

Published

on

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணகி டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கர்ப்பிணி பெண் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இவருடன் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கலை, நேத்ரா, நதி, கீதா என்ற நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது என்பதை வெளியான ட்ரைலர் மூலம் நமக்கு நன்றாக புரிகிறது.

இந்த நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நான்கு பெண்களின் வாழ்க்கையில் வரும் ஆண்களால் இவரும் ஏற்படும் பாதிப்பையும் போராட்டமே இந்த படத்தின் முழு கதை என இந்த ட்ரைலர் பார்க்கும் போது நமக்கு தெரிகிறது.

இந்த ட்ரெய்லரில் நம்மை அதிர்ச்சியாக்கிய காட்சி என்றால் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை அடிப்பது போன்ற காட்சி.