Connect with us
 

News

காதலை உறுதி செய்த நடிகை மஞ்சிமா மோகன் !

Published

on

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக்கை காதலிப்படத்தை உறுதி படுத்தினார் நடிகை மஞ்சிமா மோகன்.

நடிகர் கெளதம் கார்த்திக் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

கெளதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக தகவல் வெளியான ஆனாலும் இதை இருவருமே உறுதி செய்யாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இவர்களின் காதலை உறுதி செய்துள்ளார். இவர்களின் இந்த காதலுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.