News
எளிய வாழ்க்கையை விரும்பும் நடிகை ராஷி கன்னா !

தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷி கன்னா. விஜய்சேதுபதியுடன் துக்ளக் படத்தில் நடித்துள்ளார்.
ராஷிகன்னா நடித்துள்ள அரண்மனை 3 விரைவில் திரைக்கு வரவிருக்கிறது மலையாளத்தில் நடித்த பிரம்பம் திரைப்படம் இன்று ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது கார்த்தியுடன் சர்தார், தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
எளிமையான வாழ்க்கைதான் மகிழ்ச்சியை கொடுக்கும் என்கிறார் ராஷி கன்னா. இது குறித்து அவர் கூறுகையில் நான் எளிய வாழ்க்கையை கடைப்பிடிக்கிறேன் ஒரு ஒரு நாளையும் கடவுளை வணங்கித்தான் ஆரம்பிக்கிறேன். தேநீர் அருந்துகிறேன், யோகா செய்கிறேன் நடனம் ஆடுகிறேன் நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடிக்கிறேன்.
ஒரு சாதாரண பெண்ணை போல தினமும் என் வாழ்க்கை நகர்கிறது. நான் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை என்னை குழப்பம் இல்லாமலும் சந்தோஷமாகவும் என் மனதை சீராக வைத்துக்கொள்ள எனக்கு மிகவும் உதவுகிறது என்கிறார் ராஷி கன்னா.