News
அஜித் – ரஜினி படங்கள்தான் திரையரங்குகளில் அதிகம் பார்ப்பேன் – அனிருத் !

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருப்பவர் ராக் ஸ்டார் Anirudh.
பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தனுஷுடன் இணைந்து நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதை தவிர Anirudh ரஜினி நடிக்கும் ஜெயிலர், கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 என மிகப்பெரிய படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் மிகவும் பிஸியாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனுஷின் திருச்சிற்றிம்பலம் வெளியான அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய Anirudh நான் திரையரங்குகளில் படம் பார்ப்பது மிகவும் குறைவு. அதிலும் ரஜினி மற்றும் அஜித் படங்கள்தான் அதிகம் பார்ப்பேன் அதன் பிறகு தனுஷ் படம் பார்ப்பேன் என்று கூறினார்.
இவ்வாறு கூறிய அந்த வீடியோவை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.