Connect with us
 

Songs

அனிருத் இசையில் சம்பவம் செய்யும் உலக நாயகன் கமல் ஹாசன் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’ அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 15-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் வரிகள் எழுதி பாடிய இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 3-ம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமலின் குத்தாட்டங்களைக்கொண்டு உருவாகியிருக்கும் இந்த பாடல் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்து வைத்துள்ளது.