Connect with us
 

Songs

வாரிசு படத்தின் தீ தளபதி வீடியோ பாடல் வெளியானது !

Published

on

இயக்குநர் வம்சி இயக்கத்தில் ஜனவரி 11-ம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்த இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க எஸ்.தமன் இசையமைத்திருந்தார்.

கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் பட்டையை கிளப்பியது. 11 நாட்களில் உலகமெங்கும் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தமனின் மிரட்டலான இசை இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதிலும் ரஞ்சிதமே பாடல் எல்லாம் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.

இந்த நிலையில் இன்று சிலம்பரசன் பாடிய தீ தளபதி வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.