Connect with us
 

Songs

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !

Published

on

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நாயகனாக நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படத்தில் வடிவேலுவுடன் ஷிவாணி நாராயணன், ரெடின் சிங்ஸ்லி பலர் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘அப்பத்தா’ என ஆரம்பிக்கும் இந்த பாடலை வடிவேலு அவர்களே பாடியுள்ளார். அத்துடன் இப்பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். நடன இயக்குநராக இந்தியன் மைக்கல் ஜாக்சன் பிரபு தேவா பணிபுரிந்துள்ளார்.