Connect with us
 

Trailer

Nenjuku Needhi – Official Tamil Trailer !

Published

on

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பலரின் பாராட்டுக்களையும் வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம்தான் ‘ஆர்டிக்கிள் 15’. இன்றைய காலத்தில் நம் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை இந்தப் படம் பேசியிருந்தது. இப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த ‘நெஞ்சுக்கு நீதி’.

உதய நிதிஸ்டாலியுடன் ஆரி, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன் அப்துல் லீ, ராட்சசன் சரவணன் என பலரும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.