Trailer
மிரட்டும் அரண்மனை 4 ட்ரைலர் வெளியானது !

2014 ல் சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2016, 2021 ல் முறையே இரண்டாம், மூன்றாம் பாகங்கள் வெளியாகின. அரண்மனை 4 பாகம் வெளிவர உள்ளது.
இப்படத்தில் சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கே ஜி எஃப் ராம், சேஷு, மேலும் பலர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் ஆகியோர் இணைந்துஇப்படத்தை தயாரித்துள்ளனர்.
2024 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அரண்மனை 4, பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போய், இப்போது ஏப்ரல் 11 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேயாக தமன்னா நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் பாடலில் குஷ்புவும், சிம்ரனும் நடனமாடியுள்ளனர்.