இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் அஷோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில் வெளியாகிருக்கும் ஒரு பீல் குட் திரைப்படம் நித்தம் ஒரு வானம்.
வாழ்க்கையில் எப்போதும் சுத்தமாகவும், அதாவது எந்த அளவுக்கு சுத்தம் என்றால் வீட்டில் வளர்க்கும் நாயை கூட தொடாதவர், எதுவும் ஒழுங்காகவும் இருக்கவேண்டும் அதோடு செய்யும் வேலை அனைத்தையும் முறையாக செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர் அஷோக் செல்வன். ஜ.டி.கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணம் நிச்சயமாகிறது திருமண நாள் அன்று அதிகாலையில் அந்த பெண் தான் விரும்பிய காதலனுடன் சென்று விட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார் அஷோக் செல்வன். அஷோக் செல்வனின் குடும்ப மருத்துவரான நடிகை அபிராமி இவருக்கு இரண்டு கதை புத்தங்களை படிக்க கொடுக்கிறார். அந்த கதைகளின் இறுதி பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் அதை பற்றி அபிராமியிடம் கேட்க. அதற்கு அபிராமி அது கதையல்ல உண்மை என்றும் உனக்கு அதன் முடிவு தெரிய வேண்டும் என்றால் அவர்களை தேடி போய் தெரிந்து கொள் என்று கூறி அவர்களின் முகவரியை கொடுக்க அஷோக் செல்வன் அவர்களை தேடி கிளம்புகிறார். அந்த தேடலின் பயணத்தில் அவர் சந்தித்த அனுபவங்கள் அவரின் வாழ்க்கை எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
அஷோக் செல்வன் சிறு வயதிலிருந்தே எந்த ஒரு கதை படித்தாலும் அதில் வரும் கதாப்பாத்திரத்தமாக தன்னை நினைத்துக்கொள்ள கூடியவர் அப்படி நினைத்துக்கொண்டு இவர் படிக்கும் இரு கதைகளிலும் இரு வேறு அஷோக் செல்வன் வருகிறார்கள். அதில் ஒருவர் நடிகர் கார்த்திக் நடித்த மெளனராகம் திரைப்படத்தை நமக்கு நினைவூட்டுகிறார். இரண்டாவது கதையில் கோயம்பத்தூர் தமிழ் பேசும் அஷோக் செல்வன் பிரபாகரன் என்ற கதாப்பாத்திரத்தில் அற்புதமான நடித்துள்ளார். அதாவது என்ன கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை தன்னால் மிக சிறப்பாக நடித்துக்கொடுக்க முடியும் என நிரூபித்துள்ளார். இவர் தேடி செல்லும்போது அதில் பிரபாகரன் என்ற கதாப்பாத்திரம் யார் என்று நமக்கு தெரிய வரும் போது நமக்கு எதிர்பாராத சஸ்பென்ஸ் காத்திருக்கிறது. கதையில் வரும் இரு அஷோக் செல்வன் கதாப்பாத்திரம் அவர்களை தேடி செல்லும் அஷோக் செல்வன் என மூன்று விதமான கதாப்பாத்திரங்களில் தனித்தனி முத்திரை பதித்திருக்கிறார் அஷோக் செல்வன்.
மூன்று நாயகிகள் இருந்தாலும் அழுத்தமான அசத்தலான கதாப்பாத்திரம் அபர்ணா பாலமுரளி. கோவை பக்கம் இப்படி ஒரு பெண் இருக்குமா என்று நமக்கு சந்தேகம் வந்தாலும் மதி என்ற அந்த கதாப்பாத்திரத்தை தன் நடிப்பால் நம்மை வியந்து ரசிக்க வைக்கிறார்.
கதையில் படித்த உண்மை நபர்களை தேடி செல்லும் போது அஷோக் செல்வன் தோழியாக வரும் ரித்து வர்மா அழகாகவும் ரசிக்கும் நடிப்பையும் கொடுக்கிறார். ரித்து வர்மா போல் ஒரு தோழி நமக்கு கிடைக்கமாட்டாரா என ஏங்க வைக்கிறார்.
ஷிவாத்மிகா இவரின் நடிப்பும் கண்டிப்பாக நம்மை ரசிக்க வைக்கிறது. கோபு சுந்தர் இசை மற்றும் பின்னணி இசையும் விது அய்யன்னா ஒளிப்பதிவும் படத்தின் பக்கபலம்.
படத்தின் ஆரம்பத்தில் கதை என்ன என்று நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார் இயக்குநர். பின்னர் நம்மை மெதுவாக கதைக்குள் அழைத்து செல்கிறார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மனதை நெகிழவும் கலங்கவும் வைக்கிறது. வாழ்க்கையின் ஒரு ஒரு விநாடியும் நம் கையில்தான் உள்ளது என்பதை அழுத்தமாக இந்த படத்தின் மூலம் பாடமாக நமக்கு சொல்லியிருக்கிறார்.
Nitham Oru Vaanam Review By CineTime
[wp-review id=”44494″]