Connect with us
 

Trailer

சைக்கோ கொலையாளை தேடும் அசோக் செல்வன் வெளியானது போர் தொழில் டிரைலர் !

Published

on

அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

அசோக்செல்வன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘போர் தொழில்’. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்லாஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

விநோதமான கொலைகளை செய்து வரும் சைக்கோ கொலையாளியை சரத்குமாரும், அசோக் செல்வனும் இணைந்து தேடுகின்றனர். இதில் சரத்குமார் – அசோக் செல்வன் இடையே இருக்கும் சில முரண்களும் ஒரு லேயராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. க்ரைம் படங்களுக்கே உண்டான கொடூர கொலைகள் இந்த ட்ரெய்லரிலும் இடம்பெற்றுள்ளன. ‘கொலகாரன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிக்கணும்னா அவன் பண்ண கொலைகள படிக்கணும்’ என வசனமும், க்ரைம் படங்களுக்கு உண்டான டெம்ப்ளேட் காட்சிகள் அடங்கிய ட்ரெய்லரில் புதுமை தென்படவில்லை. திரைக்கதையில் புதுமை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பொறுத்து ‘போர் தொழில்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெறும். ட்ரெய்லர் வீடியோ: