News
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி !

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற வடிவேலு மற்றும் படக்குழு படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினர்.
இங்கு இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து போரூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.