படத்தின் சுருக்க கதை (SHORT STORY):
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான மணிகண்டனும் சிந்துவும் காதலிக்கிறார்கள் தற்செயலாக பெற்றோராகிறார்கள். பின்னர் சில சூழ்நிலைகளால் பிரிய நேரிடுகிறது, மணிகண்டன் தனது குழந்தையான ஆதித்யாவை ஒற்றைப் பெற்றோராக வளர்க்கிறார் பின்னர் சிந்துவும் மணிகண்டனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்
திரைக்கதை:
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான மணிகண்டன் (கவின்) மற்றும் சிந்து (அபர்ணா தாஸ்) ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள் இடையே சிந்து கருவுற்று இளம் வயதிலேயே தந்தையாகிறார் மணிகண்டன் பின் இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்யும் போது, சிந்துவின் கர்ப்ப காலத்தில் மணியின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் சில பல பொறுப்பற்ற செயல்கள் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குகிறது. அதனால் மணிகண்டன் பிறந்த குழந்தையை தனியாக வளர்ப்பதைத் தவிர வேறு வழியின்றி இருக்கிறார்.பின் ஒரு தந்தை மற்றும் மகனின் அழகான கதை மற்றும் அவர்களுக்குள் நடக்கும் பாச போராட்டம் பின்னர் பிரிந்த தம்பதிகள் ஒன்றாக இணைந்தார்களா என படத்தின் மீதி கதை அனைத்தையும் சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் கே.பாபு.
படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் :
படத்தில் IT துறையில் பணிபுரியும் கதாபாத்திரமானாலும் சரி கல்லாரி காட்சிகளானாலும் சரி சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் கவின். ஒவ்வொரு முறையும் உண்மை அவரைத் தாக்கும் போது அவர் தன்னைத்தானே உயிர்த்தெழுப்புகிற காட்சிகள் என அனைத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான போராட்ட காட்சிகளை தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளன, மேலும் பார்வையாளர்கள் தொடர்புபடுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன அபர்ணா தாஸ், பெரும்பாலான பகுதிகளுக்கு கண்ணீர் சிந்தினாலும், சிறப்பாகச் செய்திருக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி பல நிகழ்வுகளில் வேலை செய்கிறது,
படத்தின் இரண்டாம் பாதியில் பிரதீப் ஆண்டனி, வி.டி.வி.கணேஷ் போன்றவர்களின் கதாபாத்திரம் பார்வையாளருக்கு சிறப்பு விருந்தாக அமையும் அதுமட்டுமன்றி காமெடி நடிகர் என சில முன்னணி காமெடி நடிகரை போடாமல் படத்தின் கதாபாத்திரங்களையே காமெடி பண்ண வைத்திருப்பது மற்றொரு சிறப்பு இடைவேளைக்குப் பிறகு அதிக மோதல்கள் இல்லை என்றாலும், திரைக்கதை சற்று யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்களின் சேர்க்கை நம்மை மகிழ்விக்க வைக்கிறது ,
படத்தின் இன்னொரு ஹீரோ ஜென் மார்ட்டினின் பின்னணி ஸ்கோர் என்று சொல்லலாம் கதாபாத்திரங்களின் நடிப்பை தாண்டி இவரின் பின்னணி இசை பார்வையாளர்களின் பல்சை எகிற வைக்கிறது ஒளிப்பதிவாளரின் பங்களிப்பும் மிக சிறப்பாக உள்ளது.
படத்தின் மிக பெரிய மைனஸ் என சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் சில லாஜிக் மீறல்கள் காட்சிகள் சில இடங்களில் சலிப்பு தட்ட வைக்கிறது பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் பாக்கியராஜ் மற்றும் லட்சுமி போன்ற முன்னணி நடிகர்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக பயன்படுத்தி இருந்தால் படத்தின் கதைக்கு அது கூடுதல் பலமாக அமைத்திருக்கும்
மற்றபடி இயக்குனர் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார் பெரிய நடச்சத்திரங்கள் இல்லாமல் படத்தின் கதாபாத்திரகளின் நடிப்பில் படத்தை இயல்பாகவும் சிறப்பாகவும் படத்தின் கதையை மிக அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் டா டா எனும் திரைக்காவியம் இந்த வருடத்தின் டாப் டக்கர் படமாக ரசிகர்களுக்கு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
DaDa Review By CineTime
[wp-review id=”45463″]