Connect with us
 

News

நான் கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை !

Published

on

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ராஜ வம்சம் படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C . அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு .

இந்த படத்தில் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி , யோகி பாபு ,கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ,ரமணி , ராஜ் கபூர் ,தாஸ் , நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தான லட்சுமி ,சசிகலா ,யமுனா ,மணி சந்தனா ,மணி மேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார் .கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார் . நவம்பர் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாள்கள் சந்திப்பு நேற்றுமுன் தினம் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் கதா நாயகி நிக்கிகல்ராணி.

ராஜ வம்சம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .நான் கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை . ஆனால் இப்படத்தில் ஒரு பெரிய வீட்டில் உண்மையாகவே ஒரு கூட்டு குடும்பம் போல் வாழ்ந்தது போல் இருக்கிறது. நடிகர் சசிகுமார் நடிப்பின் மூலம் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தார் .இயக்குனர் கதிர் சுந்தர் சி யின் உதவியாளர். மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் .இப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கதிர் பிடிவாதமாக இருந்தார் .அப்பொழுதுதான் இந்த கூட்டு குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிப்பார்கள் என எண்ணினார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .