Connect with us
 

News

சசிகுமார் – லிஜோ மோல் நடிக்கும் ஃப்ரீடம் !

Published

on

கழுகு, கழுகு 2 மற்றும் நான் மிருகமாய் மாற படத்தின் இயக்குனர் சத்ய சிவாவின் இயக்கத்தில் சசி குமார் நடிக்கும் புதிய திரைப்படம் Freedom. சசிகுமாருடன் இப்படத்தில் லிஜோ மோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

பாண்டியன் பரசுராமன் என்பவர் இப்படத்தை தயாரிக்க ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ் மொழியை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டார்.

இரண்டு போஸ்டர்கள் வெளியிட்டிருந்தார். அதில் ஒன்றில் பற்றி எரியும் நெருப்பில் சசிகுமார் இருக்கிறார். இரண்டாவது போஸ்டரில் லியோ மோல் – சசிகுமார் இருவரும் மக்கள் திரண்டு இருக்கும் கூட்டம் ஒன்றில் சோகமாக இருக்கிறது.