News
பிக்பாஸ் சாண்டி நடிக்கும் மிரட்டலான பேய் படம் 3:33 டீசர் வெளியீடு !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நடித்து வரும் திரைப்படம் 3:33 என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில். இன்று 3.33 மணிக்கு இப்படத்தின் டீஸரை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார்.
இதில் சாண்டியின் திகில் நிறைந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து இப்படம் கண்டிப்பாக ஒரு மிரட்டலான பேய் படம் என்று தெரிகிறது.
சாண்டியுடன் இப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், ரேஷ்மா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிருக்கிறது.
நம்பிக்கை சந்த்ரு என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் இசையமைத்துள்ளார்.