News

துபாய் பட விழாவில் ஜோதிகாவின் காற்றின் மொழி !

Published

on

ஜோதிகா நடித்து வெளியான காற்றின் மொழி திரைப்படம் துபாய் பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அங்கு சர்வதேச கண்காட்சி நடந்து வருகிறது.இதில் உலக திரைப்பட விழாவில் நடக்கிறது.

இந்த விழாவில் பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் பிரிவில் திரையிடுவதற்கு காற்றின் மொழி படத்தை தேர்வு செய்துள்ளனர்.

ராதா மோகன் இயக்கிவிருந்த இப்படத்தில் விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தியில் வெளியான தும்ஹாரி சூலு படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியிருந்தது.

ஒரு சராசரி பெண்ணா இருக்கும் ஜோதிகா ஒரு ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார் என்பதுதான் படத்தின் மொத்தக்கதை.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது இப்படம் வெளியானபோது. திருமணத்துக்கு பின்னர் ஜோதிகா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Trending

Exit mobile version