யோகி பாபு , விஜய் சேதுபதி தவிர இப்படத்தில் நடித்த மற்ற அனைவரும் இதுவரை பார்த்திராத முகங்களே. குறிப்பாக சில நிஜ கிராமத்து மனிதர்களை இப்படத்தில் நடிக்கவைத்திருக்கிறார் மணிகண்டன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படம் பத்ரிக்கையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது
கிராமத்தில் விவசாயியாக வாழும் மாயாண்டிக்கு விவசாயத்தை தவிர வேறெதுவும் தெரியாது. அதே கிராமத்தில் யானையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் யோகிபாபு. மேலும் வாழ்க்கையில் எதிலுமே நாட்டமில்லாமல் இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களும் , விவசாயத்தின் அருமையை உணர்த்தும் படமாகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த கடைசி விவசாயி திரைப்படம். இக்கதையை மிகவும் யதார்த்தமாகவும், ரசிக்கும்படியும் எடுத்துள்ளார் மணிகண்டன்.
படத்தில் மாயாண்டி என்ற விவசாயியாக நல்லாண்டி என்பவர் நடித்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் இவரது நடிப்பு தனியாக தெரிகிறது.
அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நல்லாண்டி. மேலும் யானையை வைத்து பிழைப்பு நடத்துபவராக யோகிபாபுவும், வாழ்க்கையை வெறுத்தவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
இவர்களது நடிப்பை பார்த்தல் நாம் கிராமத்தில் அன்றாட பார்க்கும் மனிதர்களை போல அவ்வளவு இயல்பாக உள்ளது. மேலும் படத்தில் நீதிபதியாக நடித்த ரேய்ச்சல் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். படத்தின் கதையுடன் ஒன்றிய இவர்களது நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்தது
படம் பார்க்கும்போது நாம் நிஜமாகவே ஒரு கிராமத்தில் வாழ்ந்த உணர்வு நமக்கு ஏற்படுகின்றது.
Cinetimee
ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதிக்கு.இறந்து போன பெண்ணை நினைத்து வாழும் முருக பக்தனாக வரும் அவர் தன் கதாபாத்திரத்தைக் கச்சிதமாக செய்து முடித்துள்ளார்
நாயகனாக தோன்றியுள்ள நல்லாண்டி இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இவர் வாழ்ந்ததைத் தான் இயக்குநர் மணிகண்டன் கேமரா கொண்டு படமாக்கியிருக்கிறார் என்பது போல் அப்படி ஓர் அச்சு அசலாக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
நெற்பயிரும் உயிரும் ஒன்று தான் என்று அவர் கூறும் போது ஒரு விவசாயியின் வேதனையை உணரவைக்கிறது.பயிர்கள் செழித்து வளரும்போது மகிழும் இடங்களிலும் வாடிய பயிரைக் கண்டபோது தானும் வாடும் இடங்களிலும் நல்லாண்டி நடிப்பில் மிளிர்கிறார்.சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் இருவர்களின் கூட்டணியில் உருவான பின்னணி இசை மேலும் பலமாக அமைந்திருக்க முடியும்.
அதேபோல் யானையை வைத்துப்பிழைக்கும் யோகிபாபுவின் கதாபாத்திரமும் பெரிதான ஈர்ப்பைக் கொடுக்கவில்லை .
படத்திற்கு மிகப்பெரும் ஒரு பலமாக இருப்பது ஒளிப்பதிவு. அனைத்தையும் தனது கேமராவில் நடிக்க வைத்த மணிகண்டனை பாராட்டியே ஆக வேண்டும்.
தொழில்நுட்ப ஆதிக்கங்கள் எட்டாத ஒரு கிராமத்தில் வாழும் இந்த நல்லாண்டியின் பாத்திரத்திற்கு அருகே நம்மை அழைத்துச் சென்று கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.