News
லால் சலாம் படத்திலிருந்து திடீரென விலகிய ஆடை வடிவமைப்பாளர் !
லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தை இயக்கவுள்ளார் ஜஸ்வர்யா ரஜினிகாந்த். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ரான் இருவரும் கதாநாயர்களாக நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பூர்ணிமா ராமசாமி. தற்போது இவர் இப்படதிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து இவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்.
‘மாற்ற முடியாத வேறுபாடுகள் காரணமாக லால் சலாம் படத்தின் ப்ரீ புரொடஷன் கட்டத்திலேயே நான் விலகி கொள்கிறேன். எதிர் காலத்தில் படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் என் பெயரை நீக்க வேண்டும் என இதன் மூலம் தெளிவாக சொல்லிவிடுகிறேன். என பதிவிட்டு ஜஸ்வர்யா ரஜினிகாந்த மற்றும் லைகா நிறுவனத்தை டேட் செய்துள்ளார்.
ஜஸ்வர்யா ரஜினிகாந்தும் பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆடை வடிவமைப்பில் ஜஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தலையீடு இருந்ததே இவரின் விலகளுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.