News
வடிவேலுவுடன் நடிக்க தயங்கும் முன்னணி நடிகைகள் !

நகைச்சுவை நடிகர் வடிவேலு தடை நீங்கியதால் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு நாய் செகர் என்று தலைப்பு வைத்து இருப்பதாகவும் அறிவித்து பட வேலைகலை ஆரம்பித்தனர். ஆனால் காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்க நாய் சேகர் என்ற பெயரில் இன்னோரு படம் தயாராகி வருகிறது.
சதீஷ் படக்குழுவினர் நாய் சேகர் தலைப்பை முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளதால் அந்த பெயரை வடிவேலு படத்துக்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வடிவேலு படத்துக்கு நாய்செகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள். இந்த படத்தில் வடிவேளுவுடன் முன்னணி கதா நாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
படத்தில் வடிவேலுக்கு ஜோடி என்றும் இல்லை அவருக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் கதா நாயகியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் முன்னணி கதாநாயகிகள் அவருடன் நடிக்க மறுப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
பிரியா பவானி சங்கர், கீர்த்தி சுரேஷ் ஆகியோரையும் அணுகியதாகவும் அவர்களும் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.