Connect with us
 

Reviews

லவ் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Bharath, Vani Bhojan, Radha Ravi, Swayam Siddha, Vivek Prasanna, Daniel Annie Pope
Production : R.P.Bala – Kousalya Bala
Director: R.P.Bala
Screenplay :R.P.Bala
Cinematography :Santhosh
Editing : Ajay Manoj
Music : Ronnie Raphael
Language : Tamil
Runtime : 1 H 43 Mins
Release Date : 28 July, 2023

2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் லவ் என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தை அதே பெயரில் தமிழ் மொழியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். புலி முருகன், குரூப் போன்ற படங்களுக்கு தமிழில் வசனம் எழுதிய ஆர்.பி.பாலா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ராதாரவி மகள் வாணி போஜன் பரத்தை திருமணம் செய்து கொள்ள போவதாக கூற அவன் வேண்டாம் காரணம் தொழில் செய்து அதில் தோற்றுப்போனவன் அவர் என்று சொல்ல பேச்சை கேட்காமல் பரத்தை திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் வாணி போஜன் வயிற்றில் குழந்தை உண்டாகிறது அதனை உறுதிப்படுத்தி விட்டு வீட்டுக்கு வருகிறார் வாணி போஜன். வீட்டிற்கு வந்த வாணி போஜனிடம் சண்டை போடுகிறார். கோபத்தில் வாணி போஜனை அடித்து கொலை செய்து விடுகிறார் பரத். அந்த நேரம் பார்த்து பரத் வீட்டிற்கு வருகிறார் பரத் நண்பன் விவேக் பிரசன்னா மனைவியின் உடலை பாத்ரூமில் மறைத்து வைக்கிறார் பரத். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக்கதை.

தொழில் செய்து அதில் தோல்வி கண்ட கதாப்பாத்திரத்தில் அதனால் மனைவி வாணி போஜனால் அசிங்கப்படும் ஒரு அப்பாவி சைக்கோ கதாப்பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார் பரத்.

வாணி போஜன் படத்தில் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடமாடுகிறார். பின்னர் பாத்ரூமில் பிணமாகவே இருக்கிறார். கிடைத்த இடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நெருக்கமான ரொமான்ஸ் காட்சியிலும் சரி பரத்துடன் சண்டை போடும் காட்சிகளிலும் சரி எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, டேனி, ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர். வாணி போஜன் அப்பாவாக வரும் ராதாரவி அதிரடியாக ஒரே காட்சியில் மட்டும் மிரட்டி செல்கிறார்.

திருமணம் ஆன பின்னர் கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் காதல் இருக்க வேண்டும் அப்போதான் அந்த உறவு சுமூகமாக நகரும். இருவருக்கும் இசையில் ஈகோ இருந்தால் அந்த உறவில் என்ன நடக்கும் என்பதை இப்படத்தின் மூலம் நமக்கு காட்டியுள்ளார் இயக்குநர் ஆர்.பி.பாலா.

கணவன் – மனைவி இடையே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் இல்லற வாழ்க்கையை எந்த அளவுக்கு சீற்குலைக்கிறது என்பதை இப்படம் நமக்கு காட்டுகிறது.

படத்தின் கதை ஒரே விட்டிக்குள் நடப்பதால் நமக்கு கொஞ்சம் சலிர்ப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் கதை தெளிவாக இன்னும் சொல்லி இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

இசையமைப்பாளர் ரோனி ராப்சல் மற்றும் ஒளிப்பதுவாளர் பி.ஜி.முத்தையா இருவரும் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.