News

மாநாடு படத்தின் சிங்கிள் விரைவில் வெளியாகும் யுவன் டுவிட் !

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் முதல் பாடல் கடந்த ரம்ஜான் தினத்தில் வெளியிட திட்டமிட்டனர் படக்குழு. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தாய் மறைவால் அதை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி இந்த கொரோனா ஊரடங்கு முடிந்து இயழ்பு நிலை வந்ததும் முதல் பாடல் வெளியாகும் என்று கூறினார்.

இதனிடையே இப்படத்தின் பாடலை யுவன் ஷங்கர் ராஜாதான் தாமதம் செய்கிறார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சற்று முன்னர் யுவன் பதிவு செய்துள்ள பதிவில் மாநாடு சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version