Connect with us
 

News

அவர் பக்கத்தில் யாருமில்லை இருந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் – விஜய்சேதுபதி உருக்கம் !

Published

on

விஜய்சேதுபதி தயாரித்து நடித்த லாபம் திரைப்படத்தை மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கிவிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று சென்னையில் லாபம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய விஜய்சேதுபதி:- இயக்குநர் ஜனநாதனிடம் பழகிய அனுபவங்கள் இங்கு பலர் பகிர்ந்து விட்டார்கள். அவருடைய உதவியாளர் ஆலயமணி பேச முடியாமல் போய் அமர்ந்து விட்டார். எனக்கும் அந்த உணர்வுதான். ஜனநாதன் இறந்த அன்று படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கு நான் டப்பிங் பேச வேண்டியிருந்தது. அந்த வேலை இல்லாவிட்டால் நான் அவருடன் இருந்திருப்பேன்.

அவர் இறந்தபோது யாரும் பக்கத்தில்லை. அப்படி இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஜனநாதனுக்கும் எனக்கும் இருந்த உறவு ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு. காலம் இவ்வளவு கேவலமானது என்று தெரியவில்லை. பக்கத்தில் இருக்கும்போது அவருடைய அருமை தெரியவில்லை தெரிந்திருந்தால் அவருடன் இன்னும் கொஞ்ச நேரத்தை செலவிட்டு இருப்பேன்.

யாரவது உங்களிடம் அன்பு பாராட்டினால் அவருடன் அதிக நேரம் செலவிடுங்கள். அன்பு காட்டி உறவை மேம்படுத்துங்கள். லாபம் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணமும் இயக்குநர் ஜனநாதன் மட்டுமே.

நான் இதுவரை 4 படங்கள் தயாரித்து இருக்கிறேன். ஒரு ஒரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினால் இன்னு இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் அதிகமாக இருக்கிறது.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையை கடந்து பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விதத்தில் சிந்திக்க தூண்டுகிறது. அப்படி சிந்திக்க தூண்டும் வகையில் ஆறுமுககுமார் தயாரித்து இருக்கிறார் என்று கூறினார்.