News

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன் !

Published

on

2013-ம் வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போல படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதனி தொடர்ந்து சில கன்னட மற்றும் தெலுங்கு , இந்தி படங்களில் நடித்தார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்த் பாலிவுட்டில் யுத்ரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளனர் படக்குழு.அதற்கு முன்பாக படக்குழுவினர் அனைவரும் தடுப்பூசி போட திட்டமிட்டு இன்று மும்பையில் உள்ள தடுப்பூசி முகாமில் மாளவிகா மோகன் உட்பட படக்குழுவினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Trending

Exit mobile version